இன்று பராபவ வருடம் நவம்பர் 2ம் தேதி, ஐப்பசி 16 திங்கட் கிழமை. இன்று அஷ்டமி திதி, கடக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யக்கூடிய நாள். இன்று சித்த யோகம். விருச்சிகம், தனுசு ராசியை சேர்ந்த மூலம் பின் பூராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம். இன்று கடக ராசியில் குரு – செவ்வாய் இணைவும், துலாம் ராசியில் ஆட்சி பெற்ற சுக்கிரனும் இருக்கும் நாளில் உருவாகும் திரிகிரகி யோக அருள் 12 ராசிகளுக்கு நற்பலன்கள் அருள்வார்.
இன்று 2 நவம்பர் 2026, ஐப்பசி 16 திங்கட் கிழமை, அஷ்டமி திதி, இன்று சந்திர பகவான் கடக ராசியின் பூசம் பின் ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள மூலம் பின் பூராடம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். கடகத்தில் சந்திரன் -செவ்வாய் சேர்ந்து சந்திர மங்கள யோகத்தை உருவாக்குகிறது. 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.அவசர லாப ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் நிதானமாக முதலீடு செய்யுங்கள். நிலுவை தொகையை அமைதியாகப் பேசி வசூலிப்பது நல்லது. கணக்குகளைச் சரியாகப் பராமரிப்பது சேமிப்பைப் பாதுகாக்கும்.
பணிச்சுமையால் மன அழுத்தம் உண்டாகலாம். உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்த்து, மேலதிகாரிகளின் விமர்சனங்களை அமைதியாகக் கையாளுங்கள். புதிய உறுதிமொழிகளைத் தரும்முன் பழைய வேலைகளை முழுமையாக முடிக்கவும்.