அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

பக்தி இலக்கியங்களில் ஓரெழுத்து ஒருமொழி

தொல்காப்பியம் உரியியல் சூத்திரம் 86 ‘ஐ’ வியப்பாகும் என்பதாகும்.
தொல்காப்பியம் உரியியல் சூத்திரம் 86 ‘ஐ’ வியப்பாகும் என்பதாகும். வியப்பு என்பதற்கு அதிசயம், மெய்ப்பு, வியப்பைக் கூறுமலங்காரம், பாராட்டு, மேம்பாடு, அளவு என்று பல்வேறு பொருள்களை மதுரைப் பேரகராதி குறிக்கிறது.

இயற்கையாகக் காணப்படுகிற ஒன்றிலிருந்து மாறுபட்டு நிகழும் ஒன்றினைக் கண்டு அதிசயித்து நிற்கிறோம். அப்போது நம்மையறியாமல் நம் வாயிலிருந்து ‘ஐ’ என்ற ஓரெழுத்து ஒருமொழி தோன்றுகிறது.
இறைவன் தில்லைவாழ் அந்தணர்களுக்கு, ”என் அன்பன் திருநாளைப் போவான் இப் புண்ணிய பூமிக்கு எமை கண்டுய்யும் பொருட்டு வந்துள்ளான். இப்பிறவி நீங்க, எரியினிடை நீமுழ்கி, முப்புரிநூல் மார்பருடன் முன் அணைவாய் என்று நாம் கூறியதாகக் கூறுங்கள்” என்று சொல்ல வந்த இடத்தில் சேக்கிழார் தில்லைவாழ் அந்தணர்கள் திருநாளைப் போவாரை ”ஐயரே!” என்று அழைத்ததாக எழுதியுள்ளதை நோக்குக.

நீரிடை முழ்கி எழுந்து வரலாம். எரியிடை முழ்கி எழுந்து வரல் பொதுவாக எல்லோர்க்கும் சாத்தியமற்ற ஒன்றே என்பதைக் குறிப்பால் உணர்த்தவே ஐயரே! என்று அந்தணர்களை வைத்து அழைக்க வைத்தார்.

திருப்பாணாழ்வார் தமது அமலனாதிபிரான் பாசுரத்தில்

ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்துஅரவின் அணையான்கோலமா மணிஆரமும் முத்துத்தாரமும் முடிவில்லது ஓர்எழில்நீலமேனி ஐயோ! நிறைகொண்டதுஎன் நெஞ்சினையே

என்று பாடுகின்றார்.

ஊழிக் காலத்தில் உலகு ஏழையும் உண்டு ஆலிலைமேல் ஒரு குழந்தையாய் வீற்றிருந்தவன், இன்று என் கண் முன்னே பாம்பணையில் பள்ளி கொண்டுள்ளான், அவன் பூண்டுள்ள பன்மணி ஆரமும், முத்து மாலையும் எல்லையற்ற அவனது நீலமேனியழகும் என் நெஞ்சில் நிலைத்து நின்று விட்டதே! என்று வியக்கிறார்.

இராமன் இளையவனோடும், இல்லையென்று சொல்லும்படியான இடையினையுடைய சீதையோடும் கானகத்தில் நடந்து போகிறான். இராமனின் மேனியில் சூரிய ஒளிபட்டு மறைகின்ற அழகினைக் கம்பர் பாடுகிறார். மரகதம் என்ற திடப் பொருளையும் மறிகடல் என்ற திரவப் பொருளையும் மழைமுகில் என்ற வாயுப் பொருளையும் மை என்ற திடமும் திரவமுமான பொருளையும் இராமனுடைய அழகுக்கு உவமையாக்கிக் காட்ட முயல்கின்றார். உலகத்துப் பருப் பொருள்களின் நிலைகள் எதனுள்ளும் அடங்காது கடந்து நிற்கும் இப்பரம் பொருளைச் சொல்லால் வடிக்க இயலாது, தவித்து, வியந்து கம்பர் கூறுகின்றார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of sruthi

sruthi